நிர்க்கதியாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு!

0

நிர்க்கதிக்குள்ளாகியுள்ள 40 இலட்சம் பேருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அரச ஊழியர்கள் மற்றும் நிரந்தர வருமானம் பெறுபவர்களை தவிர்ந்த ஓய்வூதியம் பெறுவர்கள், ஊனமுற்றோர், வயோதிபர்கள், விசேட தேவையுடையோர், சுய தொழிலில் ஈடுபடுவோர், சமுர்த்தி பயனாளிகள், சமுர்த்தித் திட்டத்துடன் தொடர்புடையர்களை தவிர்ந்த சுமார் 40 இலட்சம் பேர் தற்போதைய நிலையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த இக்கட்டான காலப்பகுதியில் இவர்களுக்காக 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவது குறித்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடியுள்ளோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.