நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

0

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் டெல்லி திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

பின்னர், சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் ஒருவர் சிறுவர் என்பதால், குறைந்தபட்ச தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டார்.

ஒருவர் திஹார் சிறையில் தற்கொலை செய்துகொள்ள முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா மற்றும் அக்‌ஷய் குமார் சிங் ஆகிய  நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், கருணை மனு, நீதிமன்றத்தில் மேல்முறையீடு என்று சட்டப்போராட்டம் நீடித்துக்கொண்டே போனதால், தண்டனையை நிறைவேற்றுவது தாமதமாகியது.

மூன்று முறை தூக்கு தண்டனையை நிறைவேற்ற திகதி அறிவிக்கப்பட்டு பின்னர், ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு மணிக்கு நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

20 நிமிடங்களாக தூக்கிட்ட நிலையிலேயே உடல்கள் வைக்கப்பட்ட நிலையில், பின்னர் மருத்துவர்கள் பரிசோதனை செய்து நால்வரும் உயிரிழந்திருந்தமையினை உறுதிப்படுத்தினர்.