நிறுத்தப்படுகிறதா பாரதி கண்ணம்மா சீரியல்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0

பிரபல விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’பாரதி கண்ணம்மா’ இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.

இந்த சீரியலில் கடந்த 8 ஆண்டுகளாக பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இரட்டை குழந்தை பிறந்தது மயக்கத்தில் இருந்த கண்ணம்மாவிற்கு தெரியாது. அதில் கருப்பாக இருந்த குழந்தையை மாமியார் சௌந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார்.

இதனிடையே ஹேமா படிக்கும் பள்ளியின் சமையல் காண்ட்ராக்ட் கண்ணம்மாவுக்கு கிடைக்கிறது, தனது அம்மா என்று தெரியாமல் ஹேமாவும் கண்ணம்மாவுடன் நெருக்கமாக இருக்கிறாள்.

மேலும் பாரதி வீட்டில் ஸ்வீட் செய்வது குறித்த பேச்சு எழ, கண்ணம்மாவை பரிந்துரைக்கிறாள் ஹேமா.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கண்ணம்மா பாரதியின் வீட்டிற்கே சென்று விடுகிறார்.

அவரை கண்டதும் ஹேமா விடாப்பிடியாக வந்து, கண்ணம்மாவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறாள்.

இதை கண்ட ரசிகர்கள் பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடிவுக்கு வந்து விடுமோ என அதிருப்தியில் உள்ளனர்.