நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு! இராணுவத் தளபதி நாட்டு மக்களுக்கு வழங்கும் தகவல்

0

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது அத்தியாவசிய சேவைகளுக்காக பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

நாட்டில் வரும் 30ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் ஆறாம் திகதி வரை நீடிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட ஏனைய தொழில்களை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.