நீதிக்கு புறம்பான வகையில் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம் – ஹக்கீம்!

0

நீதிக்கு புறம்பான வகையில் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசியல் பழிவாங்கலுக்காக முன்னணி அரசியல் தலைவர்களின் குடியுரிமையை பறிக்கும் மிக மோசமான நடவடிக்கையில் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை சம்பந்தப்படுத்தியே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம். நீதித்துறை கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படும் என நம்புகின்றோம்.

அத்துடன், நீதிக்கு புறம்பான வகையில் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.