கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டுள்ள நீதிமன்ற நடவடிக்கைகளை நாளை(திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுளள்து.
நீதிமன்ற சேவை ஆணைக்குழு சபையால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் ஊடாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம், வர்த்தக நீதிமன்றம், மாவட்ட, நீதிவான் நீதிமன்றம், தொழில் நிதிமன்றங்களை உள்ளடக்கும் வகையில் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரணமான நிலை காரணமாக நீதிமன்றங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.