நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 72 வீதமாக அதிகரிப்பு!

0

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 72 வீதமாக அதிகரித்துள்ளது.

நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் டி அபேசிறிவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு கதவுகள் தலா 3 அடியாலும், மேலும் இரண்டு கதவுகள் தலா 2 அடிகளாலும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரவெவ, நச்சுடுவ வெவ, மஹவிலச்சிய வெவ மற்றும் யான் ஓயா ஆகிய நீர்த்தேக்கங்கள் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.