நீலாப்பொல காட்டுப்பகுதியில் 5 கைக்குண்டுகள் மீட்பு

0

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாப்பொல காட்டுப்பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 5 கைக்குண்டுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவப் புலனாய்வுத் துறைக்குக்  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சேருநுவர பொலிஸார் கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. இதுத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு,  நீதிமன்ற அனுமதியை பெற்று மீட்கப்பட்டு கைக்குண்டுகள் செயழிலக்கச் செய்யப்படவுள்ளன.