‘நுவரெலியா வருகிறார் சாணக்கியன்’ – 17 ஆம் திகதி உரை

0

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான மலையக இளைஞர் முன்னணியின் மாநாடு எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா அரங்கில் நடைபெறவுள்ளது.

முன்னணியின் தலைவர் கலாநிதி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சிறப்புரையாற்றவுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் நிதிச்செயலாளர் தனது முகநூல் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.