நேற்று உயிரிழந்த பெண் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

0

கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (05) உயிரிழந்த கொழும்பு- முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த பெண், ஒரு மாத காலமாக நோய் அறிகுறிகள் காணப்பட்ட போதிலும் உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிப்படுகிறது.

குறித்த பெண் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சுவாசக் கோளாறு காரணமாக ஹெலிஹவுஸ் பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளார்.

இதனையடுத்து, நோய் மேலும் அதிகரித்தமையின் காரணமாக மே மாதம் 2 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இப்பெண் நேற்று (05) உயிரிழந்துள்ளார்.

இப்பெண்ணுடன் சேர்த்து கொரோனாவால் இலங்கையில் பதிவாகிய உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், குறித்த பெண்ணின் கணவன், பேக்கரி உற்பத்திகளை ஓட்டோவில் விற்பனை செய்து வந்தவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.