நேற்று மட்டும் 152 பேருக்கு கொரோனா

0

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளாக 152 பேர் நேற்று (27) இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 92 பேர் குவைட்டிலிருந்து  வருகைதந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என்பதுடன், 53 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மேலும் 5 பேர் சென்னையிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.