நேற்று மட்டும் 71 பேருக்கு கொரோனா

0

நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 71பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில் ஒரு நாளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிகளவு நபர்கள் பதிவான நாளாகும்.

இதேவேளை நேற்று 53 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி 16 பேர் வெலிசர முகாமிலும் மேலும் 37 பேர் விடுப்பில் இருந்தவர்கள் என்றும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து 120 பேர் பூரண குணமடைந்துள்ள அதேவேளை, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 378 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வரும் நிலையில் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.