நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

0

இலங்கையில் நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 37 ஆ யிரத்து 67 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் இதுவரை 22 இலட்சத்து 59 ஆயிரத்து 385 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக 59 ஆயிரத்து 881 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 12 இலட்சத்து 69 ஆயிரத்து 157 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம், நேற்று சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 76 ஆயிரத்து 615 பேருக்கு செலுத்தப்பட்டது.

இதேவேளை, நேற்றைய தினம் 181 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.