நாடு பூராகவும் பல்வேறு பிரதேசங்களில் தற்போதைய நிலையில் கொவிட் தொற்றாளர்கள் அதிகமாக பதிவாகி வருகின்ற சூழலில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் நிறுவனம் கொவிட் வைரஸ் குறித்து புதிய சோதனைகளைத் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, செவ்வாய்கிழமை புதிய பரிசோதனைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அதன் பணிப்பாளர், வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
சாதாரண பி.சி.ஆர் சோதனைகள் மூலம் இலங்கையில் பரவும் புதிய கொவிட் 19 வைரஸை அடையாளம் காண முடியாமையினால் இந்த புதிய பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அமெரிக்கா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வரும் வைரஸ் இலங்கையினுள் பரவியுள்ளதா என்பது தொடர்பில் அறிந்துக் கொள்ளமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பரிசோதனைகளின் மூலம் மிகக் குறுகிய காலத்தில் முடிவுகளைத் பெற்றுத் தர முடியும் என வைத்தியர் சந்திம ஜீவன்தர தெரிவித்தார்.