படையினர் மீது தாக்குதல்

0

பாதுகாப்பு நிமித்தம் சூரிபுரம் கிராமத்துக்குச் சென்ற விமானப் படையினர் இருவர் மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு விமானப்படைத் தளத்தைச் சேர்ந்த இரண்டு விமானப் படையினரே, இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

சூரிபுரம் கிராமத்துக்கு பாதுகாப்பு நிமித்தம் சென்றபோது, அங்கு கூடி நின்ற இளைஞர்களுக்கும் விமானப்படையினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த வாய்த்தர்கம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது, 2 விமானப் படையினர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதில் ஒருவர் காயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, விமானப் படையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் இருவரை, முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.