பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு – புதிய அறிவிப்பு வௌியானது!

0

மேன்முறையீடுகளுக்கு அமைய தொழில் வாய்ப்புகளுக்காக தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத பட்டதாரிகள் மேன்முறையீடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் பணித்திருந்தது.

இதற்கமைய, தெரிவுசெய்யப்பட்ட மேலும் சில பட்டதாரிகளின் பெயர் விபரங்களை, அரசாங்கம் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

www.pubad.gov.lk என்ற இணையத்தில் பிரவேசிப்பதன் ஊடாக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.