பட்டதாரி பயிலுநர் பயிற்சியின் இரண்டாம் கட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

0

பட்டதாரி பயிலுநர் பயிற்சியின் இரண்டாம் கட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020.10.12 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்படிருந்ததாகவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பயிற்சியின் ஆரம்பத்தை பிற்போடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி ஆரம்பமாகும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறே தற்போது பிரதேச செயலாளர்கள் அனுமதித்துள்ள பயிற்சி நிலைய மாற்றங்களை 2020.10.16 ஆம் திகதிவரை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.