பண்டிகைக் காலத்தில் மீண்டும் அத்தியாவசிய உணவுகளுக்கு தட்டுப்பாடு?

0

கொழும்பு துறைமுகத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க முடியாமல் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக பணம் செலுத்தி அவற்றை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கொள்கலன்களில் உருளைக்கிழங்கு, கடலை, செத்தல் மிளகாய், பருப்பு மற்றும் மசாலா உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் இருப்பதாகவும் அவற்றின் மதிப்பு 150 மில்லியன் டொலர் முதல் 200 மில்லியன் டொலர் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.