‘பண்டோரா ஆவணம்’ – ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

0

பண்டோரா ஆவணத்தில் இலங்கை விடயம் சம்பந்தமாக உள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இந்த தகவலை அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டளஸ் அழகப்பெரும சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிட்டார்.

அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை எனவும், வியாபார குடும்பத்துடன் தொடர்புபட்ட ஓருவர் உள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.