பண்டோரோ பேப்பர்ஸ் தொடர்பான இரகசியங்களை வெளியிட தயாராகும் ரஞ்சன்

0

சிறைச்சாலையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake), பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Paper) தொடர்பான சாட்சிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

தனது சட்டத்தரணி ஊடாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் அறிவிப்பதற்கு ரஞ்சன் ராமநாயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

நேற்று அவரது சட்டத்தரணி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ஈவா வனசுந்தரவிற்கு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய பண்டோரோ மோசடியில் சிக்கிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ (Nirupama Rajapaksa) மற்றும் அவரது கணவரான திருகுமார் நடேஷன் தொடர்பான தகவல்களை ரஞ்சன் ராமநாயக்க வழங்க தயாராக உள்ளார் என ரஞ்சனின் சட்டத்தரணி நேற்று தெரிவித்துள்ளார்.

பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பான விசாரணைகளை ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னெடுத்த வருகிறது.

இந்தவிசாரணைக்கு முழுமையான ஆதரவு வழங்குவதற்கு தனது கட்சிக்காரர் தயாராகி இருப்பதாக குறித்த சட்டத்தரணி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அறிவித்துள்ளார்.