பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதியை, வாகனத்தின் பெறுமதியில் 80 வீதம் வரை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பிலான உத்தரவை மத்திய வங்கி, நிதி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
முதலாது பதிவின் பின்னர், ஒரு வருடத்திற்கும் அதிகக் காலம் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படவுள்ளது.