பம்பலப்பிட்டி, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளில் புதிய திரிபுடைய கொவிட் தொற்றாளிகள் பதிவு

0

தெஹிவளை, பம்பலப்பிட்டி மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளில் புதிய திரிபுடைய கோவிட் வைரஸ் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.

இன்று காலை 6.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் இந்தப் பகுதிகளில் புதிய திரிபுடைய நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.

கல்கிஸ்ஸ பகுதியில் 30 பேரும், தெஹிவளையில் 27 பேரும் பம்பலப்பிட்டியில் 21 பேரும் என்ற அடிப்படையில் புதிய கோவிட் நோய்த் தொற்று திரிபுடைய நோய் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.

இந்தக் காலப் பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 333 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.

இன்று காலை 6.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் மொத்தமாக நாடு முழுவதிலும் 2518 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.