பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று ஷவேந்திர சில்வா வெளியிட்ட புதிய செய்தி!

0

கடந்த வியாழக்கிழமை இரவு 11.00 மணிக்கு நாடு முழுவதும் விதிக்கப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4.00 மணி முதல் நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலகட்டத்தில் மக்கள் அளித்த ஆதரவுக்கு இராணுவத் தளபதி நன்றி தெரிவித்தார்.

பயணத் தடைகள் நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஒன்று கூட வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை வழங்கிய சுகாதார அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் இராணுவத் தளபதி மக்களைக் கேட்டுக்கொண்டார்.

சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றினால் அடுத்த 2-3 வாரங்களில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இராணுவத் தளபதி நம்பிக்கை வெளியிட்டார்.

இதற்கிடையில், குறைந்த அறிகுறிகளைக் காட்டும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு வீட்டு சிகிச்சை குறித்த வழிகாட்டுதல்களை வரும் நாட்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிடுவார் என்றும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.