பயணக்கட்டுப்பாடு குறித்த முக்கிய தீர்மானம் இன்று!

0

பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண  இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் கொரோனா தடுப்பு செயலணியின் விசேட சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.

இந்த நியைில், தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுவது தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் நாட்களில் எவ்வாறான சுகாதார நடைமுறைகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்பது குறித்தும் இன்று தீர்மானிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் இன்று அதிகலை 4 மணி முதல் அமுலாகும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளன.

கடந்த 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகளே இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளன.