பயணக்கட்டுப்பாடு நீடிப்பு – புதிய அறிவிப்பை வெளியிட்டார் இராணுவ தளபதி

0

தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

அதன்படி ஜூன் 14 ஆம் காலை 04 மணி வரை குறித்த பயணகட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்றும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

முன்னர் அறிவிக்கப்பட்ட பிரகாரம் எதிர்வரும் 7 ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.