பயணத்தடையின் போதும் குறையாத கோவிட் பரவல் – நாடளாவிய ரீதியில் இரு வார ஊரடங்கா?

0

பயணத்தடை அமுலாக்கலால் கோவிட் வைரஸ் பரவல் குறையாத நிலைமை இருப்பதால் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக இன்றைய தினம் வெளியாகியுள்ள தமிழ் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோவிட் தடுப்பு செயலணியின் கூட்டமொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றிருந்தது.

கோவிட் நோயாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமலிருப்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இப்போதுள்ள நிலைமை தொடர்ந்தால் நாம் பெரும் ஆபத்தை சந்திக்க வேண்டிவருமென பலர் இங்கு சுட்டிக்காட்டியதுடன், கடும் உத்தரவுகளுடனான ஊரடங்கு சட்டத்தை குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்காவது அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.