பயணத்தடை தொடர்பில் நீங்கள் அறிய வேண்டியவை

0

2021.05.25ஆம் திகதி அதிகாலை 4 மணியில் இருந்து இரவு 11 மணிவரை பயணத்தடை தளர்வு.

மதுபான நிலையங்கள் ஜூன் 7ஆம் திகதி வரை மூடப்படும்.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்றுவர வேண்டும்.

நாளைய தினம் (25) வீடுகளில் இருந்து வெளியேறிச் செல்வதற்கு அடையாள அட்டையின் இறுதி இலக்க முறைமையை பின்பற்ற வேண்டியதில்லை.

எந்தவொரு காரணங்களுக்காகவும் சொந்த வாகனங்களில் வர்த்தக நிலையங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை (25) இரவு 11 மணி தொடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை மீண்டும் 31ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும்.

எதிர்வரும் 31ஆம் திகதி இரவு 11 மணிக்கு அமுல்படுத்தப்படும் பயணத்தடையானது ஜூன் 4ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும்.

ஜூன் 4ஆம் திகதி இரவு 11 மணி தொடக்கம் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படும்.

பயணத்தடை அமுலில் உள்ள காலப்பகுதிகளில் பொதுமக்களின் நலன்கருதி நடமாடும் சேவைகளின் ஊடாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

இலங்கை வான்படையின் ஊடாக ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்பட்டு பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறுபவர்களை கண்டறியும் நடவடிக்கைகள் இடம்பெறும்.