யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தானது பயணிகளுக்கு மத்தியில் பொருட்களையும் ஏற்றி சென்றதால் அதில் பயணித்த பயணிகள் பெரும் அசௌகரியங்களுடன் பயணித்துள்ளனர்.
யாழில் இருந்து நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பு நோக்கி புறப்பட்ட குறித்த தனியார் பேருந்தில் அதன் நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர், பயணிகளின் இருக்கைகளிலும் பொருட்களை அளவுக்கு அதிகமாக ஏற்றியுள்ளனர். இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
சுகாதார விதிமுறைகளை மீறியவாறு பயணிகளை சமூக இடைவெளிகள் எதுவும் இல்லாமல் இருக்கைகளில் அமருமாறு கூறி ஏனைய மிகுதி இருக்கைகளில் பொருட்களை அளவுக்கு அதிகமாக ஏற்றியுள்ளனர்.
குறித்த பேருந்து குளிரூட்டப்பட்ட பேருந்தாகையால் அதனுள் ஏற்றிய பொருட்களில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
பேருந்து சாரதி மற்றும் நடத்துனரின் பொறுப்பற்ற செயலால் பயணிகள் கொரோனோ அச்சத்துடனும் , அசௌகரியங்களுடனும் பயணித்துள்ளனர்.