நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக, பொதுமக்கள் பரீட்சைகள் திணைக்கள வளாகத்துக்கு வருகை தருவதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருநாள் சேவை வழங்கும் பிரிவு, மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக, பரீட்சை சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை Online மூலமாக மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை 1911 எனும் இலக்கத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.