பரீட்சைகள் தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கும் கலந்துரையாடல் இன்று!

0

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சை தொடர்பாகத் தீர்மானிக்கும் முக்கியமான கலந்துரையாடல் இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

மினுவாங்கொட பகுதியில் ஏற்பட்டுள்ள கெரோனா தொற்று மற்றும் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகளின் பின்னணியில் தேசிய பரீட்சைகளை நடாத்துவதில் சிக்கல்கள் தோன்றியுள்ளன.

பரீட்சைகளை உரிய தினங்களில் நடாத்துவது சாத்தியமில்லை என பல்வேறு தரப்புக்கள் சுட்டிக் காட்டியுள்ளபோதிலும், பரீட்சைகளை உரிய முறையில் திட்டமிட்டபடி பரீட்சைகளை நடாத்தி முடிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

எனினும், இது தொடர்பாக தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள்செல்வாக்குச் செலுத்துகின்றன. பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இதற்கு முன்னர், பரீட்சைத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம், பரீட்சைகளை பிற்போட தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்தார்.

கல்வி அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் முதலானோர் எதிர்வரும் தினங்களில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தனர்.

பெரும்பாலும் இன்று இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.