பரீட்சைகள் தொடர்பில் இறுதி தீர்மானம் அடுத்த வாரம்!

0

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பரீட்சைகள் நடைபெறும் தினம் தொடர்பில் இறுதி தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்றை தினம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரிடையிலான கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.