பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

0

திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அத்துடன், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பதிவு மற்றும் மீள்பதிவு நடவடிக்கைகள் தொடரும் என திறந்த பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறே ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைள் தொடர்ந்தும் இடம்பெறும் என்பதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்குப் பின்னரே பரீட்சைகள் தொடர்பாக அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்படும் பரீட்சைகள் தொடர்பாக ஒருவார கால குறுகிய காலத்தில் திறந்த பல்கலைக்கழகத்தினது இணையத்தளத்தில் அறிவிக்கப்படும் குறிப்பிடப்படுகின்றது.