பருத்தித்துறை நீதிமன்றில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி தொடர்பான வழக்கு விசாரணை

0

பருத்தித்துறை நீதிமன்றில் இன்றைய தினம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி தொடர்பான வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் முன்னிலையாகியுள்ளார்.

இந்த நிலையில் வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், வி.மணிவண்ணன், வி.திருக்குமரன், கே.சயந்தன் உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர்.

மேலும் குறித்த வழக்கானது கட்டளைக்காக மே மாதம் மூன்றாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பி2பி சம்பந்தமாக பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் இணைந்து தாக்கல் செய்த வழக்கிற்கு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்று செய்யப்பட்ட விண்ணப்பம் காரணமாக பொலிஸாரின் பதிலுக்கென இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.