பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றுக்கான உச்சபட்ச சில்லறை விலை நீக்கம்

0

பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட உச்சபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது என நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 17ஆம் திகதி, ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஒரு கிலோ கிராம் பருப்புக்கான விலை 65 ரூபாய் எனவும், 425 கிராம் ரின் மீனின் விலை 100 ரூபாய் எனவும் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது.

மார்ச் 18 முதல் நடைமுறையில் வருவதாக அறிவிக்கப்பட்ட குறித்த அறிவிப்பு தற்போது நீக்கப்படுவதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.