பலங்கொடையில் மனித இனத்தின் மற்றுமொரு யுகம் கண்டுபிடிப்பு

0

பலங்கொடயில் மனித இனத்தின் மற்றுமொரு யுகம் தொடர்பான சாட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

பலங்கொட, கிரிந்திகல பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் 50 அடி ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட சுரங்க அகழ்வின் போது சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இவ்வாறான பல இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 50 அடிக்கு கீழ் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதை படிவ துண்டுகள் மூலம் ப்லய்ஸ்டோசின யுகம் அல்லது சுமார் 250,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் பரிணாமத்தை கண்டறிய முடியும்.

இதன்மூலம் 121 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பொலோசின யுகம் அல்லது நவீன மனிதனின் தோற்றம் குறித்து பல விடயங்களை ஆய்வு செய்யலாம்.

பண்டைய மனிதர்களின் எச்சங்கள் இந்த புதைபடிவங்களில் காணப்பட்டிருக்கலாம். கார்பன் ஆய்விற்கு பிறகு, அதில் மனித பாகங்கள் உள்ளனவா என்பதை உறுதியாகக் கூற முடியும்.

சுரங்கத் தொழிலாளர்கள் இந்த பகுதியில் மட்பாண்டங்களைக் கூட கண்டுபிடித்துள்ளனர் என ஆய்வுகளை மேற்கொண்ட தொல்பொருள் ஆய்வாளர் தெரவித்துள்ளார்.