பல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்த இறுதி தீர்மானம் இன்று

0

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கான விசேட கூட்டம் இன்று பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் அனைத்து துணை வேந்தர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.