பல்கலைக்கழகம் திறக்கப்படவுள்ளமை குறித்த அறிவிப்பு வெளியானது!

0

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக  மானியங்கள்  ஆணைக்குழுவினால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்  மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஏனைய   மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்  மே மாதம் 18 ஆம் திகதி  ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.