பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகள் தற்போதைக்கு ஆரம்பமாகாது

0

எட்டு பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்களுக்கான பரீட்சை இன்று 15 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

ஏனைய பீடங்களின் இறுதி வருட மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை இடம்பெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் மேற்கொள்ளப்டப்டுள்ளன. ஒரு அறையில் ஒருவர் தங்கும் விதமாகவே இவ்வசதிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக ஊழியர்களும் இன்று முதல் சேவைக்கு சமூகமளிக்கு முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார்.

எனினும், பல்கலைக்கழகங்களின் கற்றல் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.