பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி!

0

மாத்தறை – வெல்லமடம பகுதியில் அமைந்துள்ள ருஹூணு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த மாணவனும் அவருடன் தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த மற்றுமொரு மாணவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான PCR பரிசோதனைகள் நாளை(செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை குறித்த பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் பாணந்துறையினைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மாணவியும் இவரும் பல்கலைக்கழக விடுதியில் ஒரே அறையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.