பல்கலைக்கழக விருப்பத் தேர்வு ஒழுங்கை எவ்வாறு மாற்றுவது? – சிந்தித்து செயற்படுங்கள்!

0

2019/2020ம் கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தமது கற்கைநெறிகளுக்கான விருப்பத் தேர்வுகளை மாற்றியமைக்க
பல்கலைக்கழக மானியங்கள்  ஆனைக்குழு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது

மாற்றுவது எவ்வாறு?

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத் தளத்தில்
(https://www.ugc.ac.lk) உங்கள் பயனர் அடையாளம் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உமது கணக்கு பிரவேசித்து விருப்பங்களை மாற்றலாம் அத்துடன் அதை அச்சுப் பிரதி செய்து உங்கள் கையொப்பம் பதிவுத் தபாலில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவிற்கு அனுப்பி வைக்கவும்.

கவனிக்க வேண்டியவை.

முக்கியமாக உங்களால் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் காணப்படும் உங்கள் கையெழுத்தும் தற்போது நீங்கள் சமர்ப்பித்துள்ள கற்கைநெறி மற்றும் பல்கலைக்கழக  விருப்பொழுங்கை (uni code) மாற்றல் விண்ணப்பத்தில் காணப்படும் கையெழுத்தும் ஒன்றாக இருத்தல் வேண்டும்.

கற்கைநெறி மற்றும் பல்கலைக்கழக விருப்பொழுங்கை இச்சந்தர்ப்பத்தில் மாற்றம் செய்கின்றபோது முன்பு சமர்ப்பித்த கற்கைநெறி மற்றும் பல்கலைக்கழக விருப்பொழுங்கு முற்றாக நிராகரிக்கப்படுவதுடன் நீங்கள் தற்பொழுது சமர்ப்பித்துள்ள கற்கைநெறி மற்றும் பல்கலைக்கழக விருப்பொழுங்கின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு கருத்தில் கொள்ளப்படுவீர்கள்.

இவ்வாறான மாற்றம் ஒரே ஒரு முறை மாத்திரமே மேற்கொள்ள முடியும்.

முடிவுத் திகதி
02.07.2020

சிந்தித்து செயற்படுங்கள்.