பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது!

0

பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர்  நாயகம்  அசேல குணவர்தனவினால் குறித்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, பள்ளிவாசல் தொழுகையின் போது சுகாதார விதிமுறைகளுக்கமைய ஒரே நேரத்தில்  100 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் தேவையற்ற முறையில் ஒன்றுகூடுவதை தவிர்த்து செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பள்ளிவாசல்களுக்குள் பிரவேசிக்கும் போதும்   பாதுகாப்பு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களை கொண்டுவருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைலாகு செய்வதை தவிர்த்து செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.