பழுகாமத்தில் வயலில் உள்ள குடிசை எரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

0

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் வயல் காவலர் ஒருவர் தங்கியிருந்த குடிசை எரிந்ததில் அந்த குடிசையில் இருந்த நபரும் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பழுகாமத்தினை சேர்ந்த ரி சண்முகம் என்பவரே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

வயலுக்கு காவல் இருக்கும் அவரது குடிசை வயல்களை அண்டிய ஒதுக்குப்புறத்தில் இருந்ததன் காரணமாக தீச்சம்பவம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் யாருக்கும் தெரியாத நிலையில் குடிசை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இதன்போது குடிசையில் இருந்தவரும் முற்றாக எரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தீச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.