மட்டக்களப்பு- பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற சம்பவத்தில், வாழைச்சேனை- செம்மன்ஓடை 4 பிரிவு ஹிஸ்புல்லா வீதியைச் சேர்ந்த (17 வயது) யாவாத் முகமட் றிஸ்வி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன், சம்பவதினமான நேற்று அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா கல்மலை கடல் பகுதியில் கடலில் நீராடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.