பாடசாலைகளில் நவராத்திரி விழா கொண்டாட வேண்டாம்

0

மத்திய மாகாணத்திலுள்ள சகல தமிழ் மொழி மூலப் பாடசாலைகளிலும், நவராத்திரி விழா தொடர்பான எந்தவொரு விழாவும் நிகழ்வும் நடத்தப்படக் கூடாது என, சகல தமிழ் மொழி மூல பாடசாலையின் அதிபர்களுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண கல்வி செயலாளரின் பணிப்புரையின் கீழ், மத்திய மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் சத்தியேந்திரா இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவொரு சமய பண்டிகைகள், விழாக்களை நடத்தக் கூடாது என, அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.