ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி, வாகனங்களை செலுத்தும் சாரதிகளை அடையாளம் கண்டுக்கொள்வதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
போதைப்பொருட்களை பயன்படுத்தி, பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் சாரதிகளை அடையாளம் கண்டுக்கொள்வதற்கான விசேட திட்டமொன்று தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, போதைப்பொருள் கட்டுப்பாட்டிற்காக அனைத்து பாடசாலைகளிலும் உள்ள மூன்று ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த திட்டத்தின் ஊடாக பாடசாலைகளுக்குள் போதைப்பொருட்களை கொண்டு வரும் விதத்தை கண்டறிய முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக, எதிர்காலத்தில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறுகின்றார்.