இலங்கையில் பாடசாலைகளுக்கு மாணவர்களை வழமை போன்று அழைப்பதற்கான இயலுமை உள்ளதா என்பது தொடர்பில் இன்று (25) ஆராயப்படவுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
200 இற்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளில், மாணவர்களை வழமை போன்று உள்வாங்குவதற்கு இயலுமை உள்ளதா என்பது தொடர்பில் இன்று கலந்துரையாடப்படவுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் பாடசாலைகளில் காலை 7.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை அனைத்து மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தும் இன்று ஆராயப்படவுள்ளது.