பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் சுத்தம் செய்யப்பட வேண்டும்

0

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தினங்களில் கொழும்பில் உள்ள பிரதான பாடசாலைகளை சுத்தம் செய்து முடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜூன் 29 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரையில் ஏனைய பாடசாலைகளை சுத்தம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.