பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

0

நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளில் பாடசாலைகளை திறக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும் சுகாதார பிரிவின் பரிந்துரைகள் கிடைத்தவுடன் மீண்டும் பாடசாலைகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளை சுகாதார பாதுகாப்பு முறைக்கமையவே மீண்டும் திறக்க வேண்டும். பாடசாலைகள் மீண்டும் திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

பாடசாலைகளை மீண்டும் திறக்கும் முறை தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.