பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

0

நாட்டில் கொரோனா அச்சம் முழுமையாக குறைவடைந்ததை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்தார்.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் தேசிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக சிலர் தவறான கருத்துக்களை முன்வைப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நிலவும் நிலையில் பாடசாலை மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றோர் சங்கடத்திற்குள்ளாகும் வகையில் எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.