பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து வெளியாகியுள்ள தீர்மானம்

0

நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணர்கள் மற்றும் கல்வித்துறை நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகள், பாலர் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது என்பது குறித்து கலந்தாலோசனை செய்யும் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்று காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகளை முடக்குவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை எனவும், முடிந்தளவு விரைவில் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.